fire accident

சென்னை அடுத்த வானகரம் சர்வீஸ்சாலையில் உள்ள தனியார் எண்ணெய் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நேற்று இரவு எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அருகில் இருந்த இரண்டு மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்ட குடோனிற்கும், ஆறு டைல்ஸ் குடோனிற்கும் தீ பரவியது. இந்தத்தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது எண்ணெய் குடோன் அருகே எண்ணெய் நிரப்பி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று டேங்கர் லாரிகளிலும் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியே கரும்புகை சூழ்ந்து காட்சி அளித்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும்காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.

Advertisment

இந்தத்தீ விபத்தில் பலகோடி மதிப்பில் ஆன பொருட்கள் சேதம் அடைந்தது. மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்தத்தீ விபத்து தனியார் எண்ணெய் குடோனில் இருந்து மற்ற கடைகளுக்கு பரவியது தெரிய வந்துள்ளது.

Advertisment