திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, வைக்கப்பட்ட வாழைத்தார்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பறித்துச் சென்றது காண்போரை நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் முகப்பில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை விழா முடிந்தவுடன் கத்தி எடுத்து வந்திருந்த பொதுமக்களில் பலர் அதனை வெட்டி எடுத்துச் சென்றனர்.
இதேபோன்று, வேலூரில் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவிற்காக மேடையில் வைக்கப்பட்ட இனிப்புகளை பொதுமக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அள்ளிச் சென்றனர்.