ADVERTISEMENT

“பொங்கல் பரிசு வாங்குவதற்கு விரல்ரேகை பதிவு கட்டாயம் இல்லை”-அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

06:05 PM Dec 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு கரும்பு மற்றும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு, கூட்ட நெரிசல் இல்லாமல் பொது மக்கள் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு விரல் ரேகை பதிவு கட்டாயம் இல்லை. குடும்ப அட்டைகள் உள்ள யார் வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மற்ற பொருட்கள் வாங்க விரல் ரேகை பதிவு கட்டாயம். பொங்கல் தொகுப்பு பொருள்கள் அனைத்தும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அந்தந்த கடைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT