தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. முன்னதாக ரேஷன் கடைகளில் கரோனா பரவல் காரணமாக கைரேகை வைக்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்றுமுதல் (01.07.2021) கைவிரல் ரேகைப் பதிவு நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு அறிவித்த 2,000 ரூபாய் கரோனா நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களைப் பெற வரும்போது நெரிசல் ஏற்படும் என்பதால் ரேஷன் கடைகளில் கைரேகை முறை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கைரேகை வைக்கும் முறையானது இன்றுமுதல் தொடங்க உள்ளது. அதேபோல் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி மற்றும் புதிய கார்டுக்கு ஒப்புதல் வழங்கும் சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.