Skip to main content

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

Finger Pulse Oximeter instruments highly imorted order by tn cm palanisamy

பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை கூடுதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

முதல்வர் உத்தரவு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 43,000 (Finger Pulse Oximeter) கருவி கொள்முதல் செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதில்  23,000 (Finger Pulse Oximeter) கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும். தேவையின் அடிப்படையில் கூடுதலாகவும் (Finger Pulse Oximeter) கருவிகள் கொள்முதல் செய்யப்படும். " இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை அளவிட கருவி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

MRI scan for Senthil Balaji

 

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்த நிலையில், கடந்த 15/11/2023 அன்று உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணிற்கான மருத்துவ பரிசோதனைகள் இன்று நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை காரணத்தால் முறையாக உணவுகள் எடுத்துக் கொள்ளாததால் செந்தில் பாலாஜிக்கு இந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக இரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இன்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.