Fines for the state transport corporation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

350 கிலோமீட்டர் நின்ற நிலையிலேயே பயணிகளை பயணிக்க வைத்த அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அப்துல் அஜீஸ் என்பவர் 8 பேருடன் 1115 ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்து அரசு விரைவு பேருந்தில்வேதாரண்யம் சென்றுள்ளார். அப்போது இருக்கை இல்லை என நடத்துனர் கூறியதால்சுமார் 350 கிலோ மீட்டர் வரை நின்ற நிலையிலேயே 8 பேரும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாகநடந்த விசாரணையில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் அடிப்படையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 36 ஆயிரத்து 703 ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம்.

Advertisment

இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்துடன் திருப்பி வழங்கவும் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.