fine

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 21 நிறுவனங்கள் உட்பட, பொட்டலப் பொருள் விதிகள் பின்பற்றாத மொத்தம் 56 நிறுவனங்கள் மீது ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை அபராத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த மாதத்தில் ஈரோடு மாவட்ட நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கடைகள், நகரங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையளவு விதிகளின் படி கீழ் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அதிகாரிகள் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி மற்றும் சத்தி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றாத 23 நிறுவனங்கள், பொட்டலங்களில் குறிப்புகள் குறிக்கப்படாமல் விற்பனை செய்த 12 நிறுவனங்கள், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 21 நிறுவனங்கள் என 56 நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.