fined Rs 500 To Actor Vishal

Advertisment

நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.

சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து 10 முறை சம்மன் அனுப்பியும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.

மேலும் இந்த வழக்கில், 'விஷால் ஃபிலிம் பேக்டரி அலுவலகத்தில் சேவை வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் செல்லாதது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விஷால் ஆஜராகாதது சட்டத்தின்பிடியிலிருந்துதப்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தைக் காட்டுகிறது' என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.