Advertisment

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ. 8.67 கோடி அபராதம் வசூல்!

fgh

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள்முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 1.5 கோடி பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

Advertisment

இதன் காரணமாக இந்தியாவில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று வரை (19.04.2021) முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 8.67 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Mask
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe