A fine of Rs 2.05 lakh has been imposed on a popular shop for selling underwear at Rs 18 extra!

Advertisment

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஓசூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடைகளை வாங்கியுள்ளார். ஆனால், அதன் விலைகளை சோதித்த போது, MRP விலையை விட 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது, இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில், ஊழியர்களின் தவறால் விலை மாற்றம் நடந்திருப்பதாகக் கூறி 18 ரூபாயை அனுப்பியுள்ளனர்.

இதனையேற்க மறுத்த சிவப்பிரகாசம், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிவபிரகாசத்திற்கு ரூபாய் 5,000 இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.