இருசக்கர வாகனங்களில் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விதியை மீறுபவர்களிடம் இன்றுமுதல் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை தனிக்கை செய்து பின்னால் இருக்கையில் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதித்தனர். படத்தில் இருப்பது அடையாறு மற்றும் அண்ணாசாலை ஆகிய பகுதிகள்.