நிதி நிறுவன அதிபரை மிளகாய் பொடி தூவி கடத்தி சென்ற கும்பல்

financier incident money incident

நாமக்கல் மாவட்டம், வெப்படையைச் சேர்ந்த கவுதம் என்பவர் தனது நிதி நிறுவனத்தைப் பூட்டி விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்மக்கும்பல் அவர் மீது மிளகாய் பொடியைத் தூவி, கவுதமை காரில் கடத்திச் சென்றனர்.

இது குறித்து கவுதமின் மனைவி அளித்த புகாரின் பேரில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கவுதம் கடத்தப்பட்ட இடத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி விசாரணை நடத்தினார்.

incident namakkal
இதையும் படியுங்கள்
Subscribe