Advertisment

ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை! 

Financier Anbuchezhiyan's house including income tax department inspection!

Advertisment

சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கமகன், வெள்ளைக்காரத்துரை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்டபடங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர்களுக்கு பணத்தை வழங்கி ஃபைனான்சியர் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் அ.தி.மு.க. முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (02/08/2022) காலை 07.30 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே, நடிகர் விஜயின் பிகில் பட விவகாரத்தில், கடந்த 2020- ஆம் ஆண்டு அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe