Skip to main content

புதுவை கவர்னரின் நிதி அதிகாரம் பறிப்பு - மத்திய உள்துறை நடவடிக்கை

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
Kiran Bedi



புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  தன்னிடம் உள்ள நிதி அதிகாரத்தை தேர்வு செய்யப்பட அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 
 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜ்நாத் சிங்கிடம் அளித்துள்ள கடிதத்தில் செயலர்களுக்கு  ரூ. 2 கோடி, நிதித்துறைக்கு ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 5 கோடியும், நிதியமைச்சருக்கு ரூ 50, கோடி,  அமைச்சரவையின் நிதி நிலைக்குழுவுக்கு ரூ 100 கோடி, அமைச்சரவைக்கு ரூ 100 கோடி முதல் திட்டத்தின் ஓட்டுமொத்த தொகைக்கும் நிதி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 
 

இதனையேற்று பொது நிதி விதிகள் 13(2) ன்படி கவர்னர் தன்னுடைய நிதி  அதிகாரத்தை பல்வேறு மட்டங்களில் பகிர்ந்தளிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் தேர்வு செய்யப்பட்ட அரசின் செயல்பாடுகளை விரைவு படுத்தவும், செம்மையாக்கவும் முடியும். பொதுமக்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்வதற்கு இது அவசியம் என  உள்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 
 

இந்த கடிதம் தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை கோப்பாக தயார் செய்து கவர்னர் ஒப்புதலுக்கு தலைமைச்செயலாளர்  அனுப்பி வைப்பார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்