நிதி நிலை அறிக்கையில் தனியார் பள்ளிக்கு காட்டும் அக்கறை அரசு பள்ளிக்கு இல்லையா?

தமிழ்நாடு நிதி அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181,73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 644, 69 கோடி தனியார் பள்ளிக்கு தாரை வார்ப்பதா என்ற கேள்வி எழுத்துள்ளது.

financial position statement - school issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழ்நாடு அரசின் 2020-2021 நிதி-நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181,73 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 1,018,39 கோடி ரூபாய் மாணவர்களின் விலையில்லாப் புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் ஆகியவற்றுக்கும் மடிக்கணினி வழங்கிட 966.39 கோடியும் 158 உயர், மேனிலைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 277.88 கோடியும், சமக்ரா சிக்சா திட்டத்திற்கு 3,202.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த அதே வேளையில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 ன்படி 25% தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காகவும் அதற்குரிய கட்டணமாக மான்யத்தொகையுடன் சேர்த்து 644,69 கோடி ரூபாயினை தாரைவார்ப்பது ஏற்புடையதல்ல.

கல்வி ஆண்டிற்காக. 76,927 மாணவர்களை தனியார்பள்ளிகளுக்கு உறுதிசெய்து தருவது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெற்றோர்கள் மத்தியில் ஆர்வத்தைக் குறைக்கும். அத்தொகையினை அரசுப்பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்தலாம்.

மேலும் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் 21 மாத நிலுவைத்தொகைகாக நிதி ஒதுக்கீடு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. குறைந்தபட்ச ஒன்பது மாதத்திற்காக நிலுவைத்தொகை வழங்கிட நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கின்றது என்றார் ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன்.

Financial school teachers
இதையும் படியுங்கள்
Subscribe