
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30க்கும்மேற்பட்டவர்கள் திரண்டுவந்து மனு கொடுத்தனர்.அவர்கள் அதில், “நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எங்களை அணுகி, நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கி தருவதாக கூறினார்.
மேலும் அவர், ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன்னிடம் முதலீடு செய்தால், அதற்காக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ. 50 ஆயிரம் கொடுப்பதாகவும் அதற்கான வட்டியைத் தானே கட்டிவிடுவதாகவும் கூறினார்.இதை நம்பி நாங்கள் அனைவரும் எங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டு அவரிடம் கொடுத்தோம். இதையடுத்து அந்த நபர், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ. 2 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை கடன் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு 10 சதவீத தொகையை மட்டுமே கொடுத்துவந்தார். இரண்டு ஆண்டுகள் அந்த நபர் வட்டி கட்டிவந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக அவர் வட்டி கட்டாததால் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை வட்டி கட்டச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டால், அவர் பதில் ஏதும் சொல்லாமல் காலம் தாழ்த்திவருகிறார். இதுவரை ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை கடன் வாங்கி அவர் மோசடி செய்துள்ளார்” எனஅவர்கள் அதில் கூறியுள்ளனர். அவர்களிடமிருந்து புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. சசிமோகன், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட அந்த நபரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)