Advertisment

கரோனோவைவிட பெரிய அதிர்ச்சி... சீட்டு நடத்தி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி... ஆத்திரப்படும் பொதுமக்கள்...

கரோனோ வைரஸ் பிரச்சனையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், சீட்டு நடத்தியவர் ஒருவர் திடீரென கம்பெனி திவால் ஆனதாக அறிவித்த நிலையில் தன் எதிர்கால நலனுக்காகச் சேமிப்புக்காகக் கொடுத்த பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Advertisment

திருச்சி மலைக்கோட்டை ஜான்தோப்பை சேர்ந்த மணி என்பவர் நாகநாதர் கோவில் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். அத்தோடு நிதி நிறுவனமும், அதில் கடந்த பல வருடங்களாக ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, கமலா நேரு நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் மணியிடம் சீட்டு கட்டியிருந்த மயில் சரவணன் என்பவர் தனது நிலுவைத் தொகையைக் கேட்டுள்ளார். அதற்கு மணி, நிலுவைத் தொகையான 70,000 ரூபாயைத் தற்போது தர முடியாது. தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் எனக்கு வெளியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கு மேல் பணம் வர வேண்டி உள்ளது. எனக்குக் கொடுக்க வேண்டிய முஸ்தபா என்பவர் மீது வழக்கு போட்டுள்ளேன். இனி நீதிமன்றம் வசூல் செய்து உங்களுக்கு பணம் செட்டில் செய்யப்படும் என்று நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

tiruchi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நோட்டிஸைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மயில் சரவணன் சீட்டு நடத்திய பழக்கடை மணியிடம் சீட்டு போட்டு ஏமாந்தவர்களை அழைத்துக்கொண்டு அவரிடம் நியாயம் கேட்க செல்ல அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது. சீட்டு நடத்திய பழக்கடை மணியோ பணம் திவால் ஆயிடுச்சு என்று சொன்னவுடன் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மணி வீட்டை முற்றுகையிட ஆரம்பித்தனர். அந்த இடமே போர்க்களம் போல் ஆனதால் தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று பழக்கடை மணியைப் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போலீசார் விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டுப் பணம் செலுத்தி ஏமாந்ததும், சீட்டு நடத்தியவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

ஏமாந்தவர்களின் பட்டியல் 100க்கு மேலும் பணத்தின் மதிப்பு கோடிக்கணக்கிலும் செல்வதால் போலிசாரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

police Financial trichy corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe