/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/700_8.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கொடுக்கூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (வயது 38). கார் டிரைவரான இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், நான் கார் டிரைவராக வேலை செய்து செய்து வருகிறேன். கடந்த 2018 ஆம் ஆண்டு நெய்வேலி ஜுபிடர் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் பிரவீன்குமார்என்பவரும், அவரதுநண்பர் சேப்ளாநத்தம் வெங்கடாசலம் என்பவரும் எனக்குநல்ல பழக்கம். மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக சொன்னார்கள். அதனை நம்பி நான் வேலை வாங்க ரூபாய் 9 லட்சம் தருவதாக பேசினோம். அட்வான்ஸாக 5 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும் என சொன்னதின்பேரில் வெங்கடாஜலம் என்பவரது IOB வங்கி கணக்கில் ரூபாய் 1.50 லட்சமும், சலான் மூலமாக அதே வங்கியில் ரூபாய் 3.5 லட்சமும் செலுத்தினேன்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும், அதன் பிறகு வெங்கடாசலமும், பிரவீன்குமாரும் தனது வீட்டுக்கு வந்து ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக தருவதாக கூறியதால், 11.3.2020 அன்று நானும், எனதுபெரியப்பா மகன் சண்முகம் என்பவரும், மந்தாரக்குப்பம் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று பிரவீன்குமாரையும், வெங்கடாஜலத்தையும் சந்தித்து பணத்தை கேட்டபோது கொடுக்க முடியாது எனவும், பணம் திருப்பி கேட்டால் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
அதையடுத்துதுணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அன்பழகன் 406, 420, 506(ii) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, நெய்வேலி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த வெங்கடாச்சலம், பிரவீன்குமார் இருவரையும் செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையிலடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)