திருச்சி மாவட்டம்,மணப்பாறை வட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர்அறிவித்த ரூ.10 லட்சம் நிதியுதவியினை,
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி,திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் இரத்தினவேல், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் இன்று மாலை நேரில் சந்தித்து சுஜித் வில்சனின் தாய், தந்தையிடம் வழங்கினார்கள்.