'ஆபரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை- ஒருவர் கைது! 

finance money peoples high interest police arrested

'ஆபரேஷன் கந்துவட்டி' நடவடிக்கையின் மூலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரிடம் கடந்த 2020- ஆம் ஆண்டு வட்டிக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயை இறைச்சிகடை நடத்தி வரும் முகமது ஷெரீஃப் என்பவர் வாங்கியுள்ளார். வட்டித் தொகையைக் கட்டி வந்ததாகவும் தற்போது ரூபாய் 3 லட்சம் கேட்டு திருநாவுக்கரசு மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் முகமது ஷெரீஃப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கந்துவட்டி புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் கொடுத்த திருநாவுக்கரசு என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

கந்துவட்டி தொடர்பான, புகார்களைத் தீவிரமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Erode kanthuvatti police
இதையும் படியுங்கள்
Subscribe