Advertisment

பல கோடி மோசடி; நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

finance company president arrested multi-crore scam  Nagapattinam

Advertisment

நாகையில் பிரபல நிதி நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது 3 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. நாகையின் பழமைவாய்ந்தநிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால்வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட்டுபோன்றவற்றில்3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருந்தனர்.

finance company president arrested multi-crore scam  Nagapattinam

Advertisment

இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டுச் சென்றுள்ளனர். ஆனால், நிதி நிறுவன ஊழியர்களோ கால அவகாசம் வேண்டும் எனச் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில்நேற்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சிவசக்தி நிதி நிறுவனத்தின்உரிமையாளர் ரவி மற்றும் அவரது மகன்கள் ஜெய்சிவா,செந்தில்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் நாகப்பட்டினம் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

arrested fraud Nagapattinam police
இதையும் படியுங்கள்
Subscribe