Advertisment

மறைந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மனைவியும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவினால் சென்னையில் நேற்றுக் காலமானார்.

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக தமிழக நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன், தற்போது எதிரணியில் உள்ள மதிமுக ஒருங்கிணப்பாளர் வைகோவும், கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.