final semester results anna university

Advertisment

பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடந்த, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

www.annauniv.edu (அல்லது) https://coe1.annauniv.edu/home/ என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனிடையே, ஆன்லைனில் நடந்த இறுதி செமஸ்டர் தேர்வின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்ததால், ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்த அறிவிப்பை பல்கலைக்கழகம் இதுவரை வெளியிடவில்லை.