Advertisment

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

bn

Advertisment

கரோனா வைரஸ் தொற்று மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்ற மார்ச் மாதம் முதல் பல கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டுத்தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு,தற்போது பெரும்சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 -ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

annauniversity College students semester exam
இதையும் படியுங்கள்
Subscribe