final semester exam anna university exam time table announced

பொறியியல் உறுப்பு கல்லூரிக்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

Advertisment

அதில், இறுதி செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடைபெறும் என்றும், இணையதள வினாத்தாளில் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கில் ஒரு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 29- ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் இணைய வழியில் பொறியியல் படிப்புக்கான தேர்வு நடக்கிறது. தேர்வு அட்டவணை தொடர்பான விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வழக்கமாக மூன்று மணி நேரம் நடைபெறும் பொறியியல் படிப்பு தேர்வு ஒரு மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.