The final list of BJP candidates ... L. Murugan travels to Delhi!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில்பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளைஅதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜகதொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 05.03.2021-ஆம் தேதி கையெழுத்தானது. முன்னதாகஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதுஅதிமுக.

Advertisment

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உத்தேசப்பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.