Advertisment

உதவி ஆய்வாளரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க  இறுதி மரியாதை

புதுக்கோட்டை அருகே அகரப்பட்டியில் உடல்நலக் குறைவினால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

police

அகரப்பட்டியைச் சேர்ந்தவர் மெய்யப்பன்(54). இவர், நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவினால் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர், நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில் மெய்யப்பனின் உடலுக்கு பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார், அகரப்பட்டி மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

police Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe