Advertisment

''இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எடுப்பதே இறுதி முடிவு!'' - சி.டி.ரவி பேட்டி! 

 '' The final decision is to take EPS, OPS '' - CT Ravi interview!

Advertisment

தேசிய பொதுச் செயலாளரும், தமிழகபாஜகமேலிடப்பொறுப்பாளருமானசி.டி.ரவி இன்று திருச்சியில் செய்தியாளர்களைச்சந்தித்தார்.

முன்னதாக ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு,பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ''தமிழகத்தில் பெரும்பான்மைகட்சியாக இருப்பது அதிமுக தான். அவர்களுக்குப் பிறகுதான்பாஜக. எனவே அவர்களை முன்வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலை சந்திக்கப் போகிறோம்.தமிழக மக்கள் சரியான முடிவை அதிமுக கூட்டணிக்குக் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். பிரதமர் செய்த அனைத்து நன்மைகளையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்.கே.பி.முனுசாமி சொல்லும் கருத்தை நாங்கள்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எடப்பாடிபழனிசாமியும்,பன்னீர் செல்வமும்எடுப்பதே இறுதி முடிவு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்'' என்றார்.

KPmunuswamy ops edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe