இறுதிநாள் விடுமுறை; ஏற்காட்டில் குவிந்த மக்கள்

Final day off; People gathered in Yercaud

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்காக காத்திருக்கும் நிலையில் பல்வேறு ஊர்களுக்கு விடுமுறைக்காக சென்றவர்கள் வசிப்பிடம் திரும்பி வருகின்றனர். அதேபோல் சுற்றுலாவிற்கு சென்றவர்களும் வசிப்பிடம் திரும்பி வருகின்றனர்.

இன்று வாரத்தின் இறுதிநாள் என்பதால் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விடுமுறையின் இறுதி நாள் என்பதால் மக்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அலைமோதியது. ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் ஏரியில் படகு சவாரி செய்யும் படகு இல்லத்திலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மக்கள் குவிந்துள்ளனர்.

Holidays Yercaud
இதையும் படியுங்கள்
Subscribe