மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பட்டினம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisment

தமிழக அரசு காவிரி உரிமையை பெற எல்லா வகையிலும்அழுத்தத்தையும், நெருக்கடியையும் மத்திய அரசுக்குகொடுத்துவருகிறது.

Advertisment

jayakumar

கமல் போன்றவர்களும், ஸ்டாலின் போன்றவர்களும் அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

கமலை ஒரு நடிகராக வேண்டுமானாலும்ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒரு அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அவருக்கும், அவர் கட்சிக்கும் ஒரு எதிர்ப்பு போராட்டம் நடத்தக்கூட தகுதியில்லை. வெறும் ட்விட்டர், ப்ரெஸ்மீட்டில்எழுதியவற்றைபடிப்பதுதான் அவருக்கு தெரிந்த அரசியல்.

Advertisment

கமலுக்கு,1924 ல் நடந்த காவிரிஒப்பந்தம் பற்றித்தெரியுமா இல்லை அந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு கலவாதியானதுதான்தெரியுமா இந்த வரலாறெல்லாம்தெரியாமல்ஏதோ ஒருநாள் ரயிலில் போனதை பெருமையாக சொல்வதைப் பார்த்தால் அவருக்கு''கிழக்கே போகும் ரயில்'' படம் நியாபகம் வந்திருக்கிறது போல அதனால்தான் ரயிலில் போயிருக்கிறார். மக்கள் அனைத்தையும்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுபோன்ற ரயிலில் போனதையெல்லாம் பெரிய விஷயமாக பேசுவது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதையே குறிக்கிறது. இந்த நேரம் காரியம் நிறைவேற்றப்படவேண்டிய நேரமே தவிர அரசியல் ஆதாயம் தேடும் நேரமல்ல எனக்கூறினார்.