msi

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் (வயது88) உடலக்குறைவினால் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு காலமானார்.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் மணப்புரத்தில் 1929ம் ஆம் ஆண்டில் பிறந்த முக்தா வி.சீனிவாசன், திரையுலகில் இயக்குநராகவும், கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். சிவாஜி நடித்த இமயம், கீழ்வானம் சிவக்கும், ரஜினி நடித்த பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், ஜெயலலிதாவின் 100வது படமான சூரியகாந்தி உள்ளிட்ட 65 திரைபடங்களை இயக்கியுள்ளார். நாயகன், எதிர்க்காற்று, கோடைமழை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

Advertisment

1996ல் ஜி.கே.மூப்பனாரின் தமாகா கட்சியில் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார்.