Skip to main content

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா!

 

film director lokesh kanakaraj covid test for positive

 

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, தமிழகத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

film director lokesh kanakaraj covid test for positive

 

இந்த நிலையில், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நலம் பெற்று வலிமையுடன் திரும்புவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

 

இதை படிக்காம போயிடாதீங்க !