Film actor nambirajan wife passed away

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நாடகத்துறையில் சிறந்துவிளங்கிய துர்கா சக்திவேல் என்ற நம்பிராஜன் முதன்முதலாக ராஜ்கிரணின் ‘ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்பு அரண்மனைக்கிளி, அஜித்தின் சிட்டிசன் மற்றும் வாகை சூட வா உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சங்கராபுரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisment

இவரது மனைவி ஜெயலட்சுமிஉடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இதைக் கேள்விப்பட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திரைப்பட நடிகர் நம்பிராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று நம்பிராஜன் மற்றும் அவரது மகன்கள் வேளாண்மைத் துறையைச் சேர்ந்த கோபால், சமயநாதன் மகள் பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment

அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “நம்பிராஜன் திரைப்படத் துறையினை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்தவர். அதுபோல் கழகத்தலைவர் கலைஞரின் மீதும்கழகத்தின் மீதும் பற்றும் பாசமும் கொண்டுள்ள நம்பிராஜன் மனைவி ஜெயலட்சுமி அம்மாள் மறைவிற்கு ஆறுதலைத்தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அம்பை ரவி உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Advertisment