திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர் ஆரம்பத்தில்மலையாளத்தில் அறிமுகமானாலும்நடிகர் நாசர் எழுதி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். நடிகர் பாலாசிங் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குணசித்திர, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் புகழ்பெற்றவர். அதேபோல் சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் பாலாசிங் என்பது குறிப்பிடத்தக்கது.