Advertisment

பேருந்து இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட சண்டை... ஒருவர் மரணம், 3 பேர் கைது!

Fight in the seat of the bus ... One passed, 3 arrested

சிதம்பரம் அருகே பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (51). இவர் ஜூலை 8ஆம் தேதி அரசுப் பேருந்தில் கடலூரிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அதே பேருந்தில் பயணம் செய்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தஅருள்தாஸ் (45), ரவி (52), வேணுகோபால் (45) மூவரும் குடிபோதையில் வெங்கடாஜலபதியிடம் பேருந்து இருக்கையில் அமர்வது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டு அடித்துள்ளனர்.

Advertisment

B.முட்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு சென்ற வெங்கடாஜலபதி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதன் பேரில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபதியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதியப்பட்டு, அருள்தாஸ், ரவி, வேணுகோபால் மூவரும்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

bus goverment Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe