பட்டப் பகலில் பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் சோடா பாட்டிலால் கொடூரமாகத்தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விசாரணையில், ஈரோட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதுதெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் வெட்டுக்காட்டுவலசு பகுதியில் பட்டப் பகலில் வாகனங்கள் பரபரப்பாக சாலையில் சென்று கொண்டிருந்த நேரத்தில், பரத்ராஜ் என்ற இளைஞரை அபுபக்கர் சித்திக் என்ற இளைஞர் சோடா பாட்டிலால் கொடூரமாகத்தாக்கினார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பரத்ராஜை அங்கிருந்த மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.