கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கீழப்பாளையூர் மணிமுத்தாறில் அரசு மதுக்கடை அருகே இரு தரப்பு இளைஞர்கள் மோதிக் கொண்டதில் அரிதாஸ் என்பவரின் மகன் அருள்பாண்டி என்பவரை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். தலையில் அடிபட்ட நிலையில் தருமலிங்கம் மகன் பூவரசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

kadalore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், அக்கிராமத்திலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரியும் கீழப்பாளையூர் - கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

Advertisment

விருத்தாசலம் ஏ.எஸ்.பி தீபாசத்தியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

உயிரிழந்த அருள்பாண்டியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இதையடுத்து கீழப்பாளையூர் கிராமத்தில் போலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.