Advertisment

முன்விரோதத்தால் வாலிபருக்கு கத்திக்குத்து! 

Fight between two police investigation on coimbatore

Advertisment

கோவை மாவட்டம், செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் கேபிள் மணிகண்டன் (35). இவர், செல்வபுரம் பகுதி திமுகபொறுப்பாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திமுகபிரமுகர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (18.10.2021) இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக திமுக பிரமுகர் கேபிள் மணிகண்டன், செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மாலை 7.45 மணி அளவில் கேபிள் மணிகண்டன் அவரது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்தார். அப்போது முகக்கவசம் அணிந்துவந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென கத்தியை எடுத்து கேபிள் மணிகண்டனை சரமாரியாக குத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தால் நெஞ்சு மற்றும் கையில் படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திமுகவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe