/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/98989.jpg)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பதவி விலக கோரியும் நர்மதா என்ற பெண் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.
ஜெயக்குமார் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், அதுதொடர்பாக மனித உரிமை ஆனையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்நர்மதா என்ற பெண், கையில் தூண்டிலில் மீனை மாட்டி கொண்டு அம்பத்தூர் பேருந்து
நிலையம் அருகே ஒரு மணி நேரமாக போராட்டம் நடத்தினார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயக்குமார் மீது சமீபத்தில் சிந்து என்ற பெண் பாலியல் குற்றசாட்டு கூறிய நிலையில் அதன் மீது தமிழக முதல்வர் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருகிறார் என்றும் இதை கவர்னர் கவனத்திற்குக் தான் கெண்டு சென்றதாகவும் ஆனால் ஆளும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துவதாக குற்றம் சாட்டினார்.
பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் ஏன் இன்னும் தான் நிரபராதி என நிருபிக்க டி.என் ஏ சோதனைக்கு முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தன் மீதான குற்றசாட்டை நிருபிக்காத நிலையில் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் கூறினார்.
தகவலறிந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.தனி நபராக போராடிய பெண் நர்மதாவை பெண் காவலர்கள் இல்லாமல் ஆண் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே ஜீன் 29ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் தலையில் பச்சை தலைப்பாகையோடு கையில் நண்டுகளை வைத்து போராட்டம் நடத்தி சிறை சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)