தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இன்று (26.07.2019) காலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.