உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்அர்ஜென்டினா அணியின்வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்துபோட்டியில் அர்ஜென்டினா 3-வது முறையாக 36 ஆண்டுகள் கழித்துவெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை கால்பந்தாட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு சார்பில் 36 கிலோ கேக் கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் போல் வடிவமைக்கப்பட்டு அதன் நடுவில் கால்பந்து பதிந்து இருப்பதுபோல் வடிவமைப்பு செய்த கேக்கை வெட்டி தங்களதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்துகால்பந்தாட்ட அணியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.