Advertisment

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து-சிவகாசியில் பரபரப்பு

Fierce explosion in firecrackers godown-Shivakasi stirs panic

Advertisment

சிவகாசியில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் பட்டாசு குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியிலுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகாசி தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் அங்கே சென்றுள்ளனர். மக்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் தடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாசு கிடங்கு சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த விபத்தில் உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Sivakasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe