
தமிழகத்தில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரியில் பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது,விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பொழிந்தது. இதனால் 17 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்த மழையின் காரணமாக, வடிகால் வாய்க்கால்களில் நீர்வரத்து அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியது. அப்பொழுதுவயல்களில் தண்ணீர் புகுந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் வருடாவருடம் இது போன்ற நிகழ்வு நடைபெறுவதுவழக்கம். ஆனால், இந்த வருடம் அளவுக்கு அதிகமாக 500 ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளது. இது அந்த பகுதியில் சம்பா பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் வேதனையை கொடுத்துள்ளது. இதற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)