Advertisment

சொற்ப எண்ணிக்கையில் ரசிகர்கள்! வெறிச்சோடியது சேப்பாக்கம் மைதானம்!

ipl chennai

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. மறியல் -தடியடியால் அண்ணாசலையே போராட்டக்களமாக மாறியதால் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் வருகை சொற்ப எண்ணிக்கையில் இருந்து வெறிச்சோடிக்கிடக்கிறது.

Advertisment

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.

Advertisment

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்வதைக்கண்டித்து பல்வேறு கட்சியினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த போராட்டத்தினால் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பலரும் ஸ்டேடியத்திற்கு செல்ல பயந்து ஓடினர். இதனால் கிரிக்கெட் ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் 7.15 மணி வரையிலும் சேப்பாக்கம் மைதானம் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்கள் இருப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் பாரதிராஜா, சீமான், அமீர், தங்கர்பச்சான், ராம், வெற்றிமாறன் என போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருவதால் போக்குவரத்து சீராகி வருகிறது. இதனால் ரசிகர்களின் எண்ணிக்கை ஸ்டேடியத்தில் கூடுமா என்பதுதான் கேள்விக்குறி.

Chepauk Ground fans number
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe