style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாகசென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலத்தோடு இருக்கிறார். தற்போது அவருக்குகாய்ச்சல் குறைந்துள்ளது. சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள்யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்