Advertisment

திருவிழாக் கோலம் பூண்ட திருவண்ணாமலை- மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம்

 Festival faceThiruvannamalai- Preparations for lighting the lamp on the top of the hill are in full swing

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச விழாவாக இன்று(13.12.2024) 2668 அடி உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக இன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம் கோவில் கருவறையில் ஏற்றப்பட்டது. தீபத்தை காண பெருமழையும் பொருத்தப்படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். 14.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலையை பக்தியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இதனால் திருவிழா கோலம் பூண்டுள்ளது திருவண்ணாமலை.

Advertisment

தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக சுமார் 18,000 போலீசாரை திருவண்ணாமலை மாநகரத்துக்குள் குவித்துள்ளது மாவட்ட காவல்துறை. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் வடக்கு மண்ட ஐ.ஐீ அஸ்ராகார்க் முன்னிலையில் 14 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.தற்போது மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகநடைபெற்று வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் மலைமேல் தீபம் ஏற்பட உள்ளது.

Advertisment
thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe