Fengal Storm Update; Increase in flow to Chembarambakkam Lake

ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Advertisment

இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

Advertisment

அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர். வானிலை மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Fengal Storm Update; Increase in flow to Chembarambakkam Lake

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் ஒன்றாக இருக்கும் செங்குரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 4,856 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 3,745 கன அடியாக இருந்த நீர்வரத்து தொடர் கனமழை காரணமாக 4,856 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்தமாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 19.31 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,436 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை அடுத்த கோவளம் பகுதியில் 60 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக காற்று வீசி வருகிறது. இன்று மாலை புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment