Skip to main content

'ஃபெங்கல்' புயல் எதிரொலி; பல துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
nn

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.  இதற்கு 'ஃபெங்கல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் நாளை (30.11.2024) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயல் காற்றழுத்த தாழ்வாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகள் பொய்யாகும் நிலையில் புயல் சின்னம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உருவாகியுள்ள  'ஃபெங்கல்' புயலானது புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 'Fengal' Storm Echo; Storm cages boom

இந்நிலையில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் காரைக்கால், நாகை துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. புதுவையில் ஏழாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மூன்றாம் எண் புயல் கூண்டு:  திடீர் காற்றுடன் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிப்பதற்கான எச்சரிக்கை ஆகும். 

ஐந்தாம் எண் புயல் கூண்டு: துறைமுகத்தின் இடதுபுறம் புயல் கடக்கும் வாய்ப்பைக் குறிக்கிறது. இதனால் துறைமுகம் கடுமையான வானிலை தாக்கத்திற்கு உள்ளாகும் என அறிவிப்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஆறாம் எண் புயல் கூண்டு: புயல் துறைமுகத்தில் வலது பக்கமாக கரையை கடக்கும் என்பது பொருள். ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்

ஏழாம் எண் புயல் கூண்டு: துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் எனவும் பொருள். 6 மற்றும் 5வது எண்ணிற்கான எச்சரிக்கைகளை உள்ளடக்கியது. ஆனால் துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என்று பொருள். துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க ஏழாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது.

சார்ந்த செய்திகள்