/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Suicide_0.jpg)
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. (வயது 30). இவருக்கு புவனேஸ்வரி (26) என்ற மனைவியும், விஷாலி என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளனர். ராஜு கடந்த 8 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் புவனேஸ்வரி தனது குழந்தை விஷாலியுடன் விவசாய கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கணவன் இறப்பை ஏற்க முடியாததால் புவனேஸ்வரி குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து பெரியதச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)