Female revenue inspector arrested for taking bribe

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாரதி. இவர் மேல் நாச்சி பட்டு பகுதியைச்சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் கலந்த பணத்தை பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று பழனிசாமி பெண் வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், பாரதியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரிடம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.